துரை.பொன்னுசாமி

புலவர் துரை.பொன்னுசாமி படைப்புகள்

11.முதற்பக்கம்

                  வாழ்த்து

பாலூட்டி வளர்த்த போதே
    பசுந்தமிழ்த் தேனு மெந்தன்
பாலூட்டி வளர்த்த தாயே
    பரிவுடன் என்னை யன்று
தாலாட்டும் போதே மானந்
    தருமொழி செவியி லூட்டி
நூலூட்டும் பண்பு மூட்டி
    நுண்ணறி வளித்தாய் போற்றி
               வணக்கம்

தன்னையும் உயர்த்தி நட்புத்
    தம்பிமார்க் குதவி நாளும்
அன்னைபோல் பரிவு காட்டித்
    தந்தைபோல் அறிவு கூட்டி
என்னையும் வளர்த்துக் காக்கும்
    இன்குணச் செம்மல் என்றன்
முன்னையென் தெய்வந் தன்னை
    மும்மையும் பணிந்தேன் வாழி

  • நூலின் பெயர் :             கலைஞர் ஆற்றுப்படை
                                                  KALAYGNAR AUTRUPPADAI
  • நூலின் வகை   :            கவிதை
  • ஆசிரியர் :                         துரை.பொன்னுசாமி
  • பொருள் :                          டாக்டர்.கலைஞர்.மு.கருணாநிதி புகழ்பாடல்
  • முதற்பதிப்பு:                   அக்டோபர் 2000
  • பதிப்புரிமை:                    மாரியம்மாள்  பொன்னுசாமி

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>