25.அருஞ்சொற்பொருள்
அருஞ்சொற்பொருள்
1.காப்புப் பருவம்
ஓதாமல் – சொல்லாமல்
செவ்வேள் – முருகன்
பாங்குஆரும் – தகுதி மிகும்
பழநாடு – பழமையான நாடு
படர் அற்று – துன்பம் நீங்கி
இணை – சமம்
ஓங்கி – உயர்ந்து
ஆர்கின்ற – கூர்மையடைகின்ற
ஆர்க்கின்ற – கட்டுகின்ற, பிணைக்கின்ற
முருகு – முருகன்
தமிழ்த்தென்றல் – திரு.வி.க
தேறும் – தெளிவடையும்
தமிழவேள் – தமிழ்முருகன்
மிடுக்கு – வன்மை
அணுகாது – நெருங்காது
மீக்கூறும் – மேன்மையாகப் பேசும்
அருவாகி – உருவமற்றதாகி
அணு – நுண்துகள்
முகில் – மேகம்
திருமாது – திருமகள் இலக்குமி
கலைமாது – கலைமகள் சரஸ்வதி
ஜெயமாது – வெற்றிக்குரியவள், சக்தி – துர்க்கை
செம்மல் – பெருமையிற் சிறந்தவன்
மாசு – குற்றம்
இரங்கி – வருந்தி
மறுகுறு – மனங்கலங்க
ஈனர் – இழிந்தவர்
காசுறுமதிப்பு – மணியணியால் வரும் மதிப்பு
கறுத்தவர் – பகைவர்
ஆசுற – குற்றம் உண்டாக
ஏசினாரும் – பழித்துக் கூறியவரும்
அண்டி – நெருங்கி
இகம் – இப்பிறவி
உகம் – பூமி
உன்னத – உயர்ந்த
சாருவாகம் – உலகாயதம்
புர – காப்பாற்று
ஆரம் – மாலை
மணாளன் – மணமகன்
பரலோகம் – மேலுலகம்
பூமாது – பூவிலிருக்கும் மாது – திருமகள்
மக – பிள்ளை
2.செங்கீரை பருவம்
கையர் – வஞ்சகர்
அட்டதிசை – எட்டுத் திசை
பேதம் – வேறுபாடு
சாட – தாக்கிப்பேச
எத்தர் – ஏமாற்றுபவர்
வச்சர் – உலோபிகள்
அத்தன் – தகப்பன்
வனை – அன்னை (இடைக்குறை)
தொத்தா – அண்ணாவைப் பேணி வளர்த்தவர்
ஆடகம் – பொன் (ஆடகப்பொன் – ஒருபொருட் பன்மொழி)
என்கோ – என்பேனோ (ஓ- வியப்பிடைச் சொல்)
அம்புவி – அழகிய உலகம் (நாடு)
மொய்ம்பு – வலிமை
தரணி – பூமி (இடவாகுபெயர்)
புரை – குற்றம்
உய்வு – வாழ்வு
வெவ்வேலி – கொடியதடை (பண்புத் தொகை)
3.தாலப் பருவம்
நாகு – இளமை
மாடு – செல்வம்
ஆள்வினை – ஊக்கம்
திணிவு – திட்பம் – செறிவு
தெரிவு – தேர்ந்தெடுத்தல்
கணிப்பு – மதிப்பிடுதல்
கரவு – மறைவு
மகிமை – பெருமை
பரவை – கடல்
ஒண்டமிழ் – புகழ்மிகுந்த தமிழ்
வாங்குவளை – வளைந்த வளையல்
பாவிப் பரவிய – விரிந்து பரந்த (ஒருபொருட் பன்மொழி)
வெருவற்குரிய – அஞ்சுவதற்குரிய
மருவற்கரிதாய் – கிட்டுதற்கரிய
பொருதுகளம் – போர்க்களம் – வாதாடும்மேடை – பட்டிமன்றம்
பொருதும் அலை – மோதும் அலை
அலகில் – எண்ணில்லாத – அளவில்லாத
இலகுதமிழ் – எளியதமிழ்
ஏரார் சென்னை – அழகுமிகுந்த சென்னை
அளி – இரக்கம்
விளிவு – இறப்பு – அழிவு
பூணாத – அணியாத
அடவேறு – வலிமையுள்ளகாளை
செளமியன் – அண்ணாவின் புனைபெயர்
4.சப்பாணி பருவம்
கன்னல் – கரும்பு
கண்டு – கற்கண்டு
கொண்டல் – மேகம்
வைகினர் – தங்கினர் – வாழ்ந்தனர்
இங்கிதமாக – கருத்தோடு
அற்றம் – வறுமை
மலிந்திட – பெருக
கொற்றம் – வெற்றி
கொட்டம் – இறுமாப்பு
ஆகடியம் – ஏளனம் – பரிகாசம்
படிற்றுக்களை – அடங்காமையாகிய களை
மிடி – வறுமை
பொருவோய் – ஒப்பாவாய்
உறுமிருள் – மிகுந்த இருள்
கொழிதமிழ் – தெள்ளிய தமிழ்
குணகுடகடல் – குணகடல், குடகடல் – கிழக்குக்கடல், மேற்குக் கடல்
ஒருவிய – நீங்கிய
வதுவையர் – மணம்புரிந்தவர்
அண்ணாவின் – மணம்புரிந்தவர்
அண்ணாவின் கடிதங்கள் – என்னும் நூலிலிருந்து
இப்பாவிற்குரிய விளக்கம் பெறலாம்.
தத்தும் கனிவு – அளவுகடந்த பாசத்துடன்
பேதம் – மாறுபாடு
5.முத்தப் பருவம்
காந்தம் – ஈர்க்கும் சக்தி
சித்தம் – மனம்
உருவெள்ளி – உருவத்தைக்கண்டு இகழ்ந்து
கவைக்குதவா – பயன்படாத (மரபுத் தொடர்)
விரைக்கின்ற – மணக்கின்ற
நாடுகிறார் – விரும்புகிறார்
விடர் – நிலப்பிளப்பு
அச்சுமாறா உண்மை – உடல் வடிவம் மாறாத உண்மை
(உருவ அமைப்பு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மாறாத இயல்பு)
வெய்ய – கொடிய
குலக்கல்வி – பிறந்த குலத்தவர் செய்யும் தொழிலே செய்யக் கற்பித்தல்-கற்றல்)
வீறு உறும் – மிகுதியாகும்
கோது – குற்றம்
ஓம்பி – காத்து
ஒன்னார் – பகைவர்
மூங்கை – ஊமை
தானம் – இடம்
ஞாலம் – உலகம்
முடுக்கினர் – நெருக்கினர் – வற்புறுத்தினர்
நிரப்பு – வறுமை
6.வருகைப் பருவம்
மதிமுகில் – அறிவாகிய மேகம் (உருவகம்)
மருவார் – பகைவர்
திறை – வரி
இடும்பை – துன்பம்
மதுகை – வலிமை
இகலி – மாறுபட்டு
மாற்றார் – பகைவர்
முகிழ்க்கும் – தோன்றும்
ஓவா – நீங்கா
வம்பர் – பயனற்றவர்(வெறும் பேச்சுப் பேசும் வம்புக்காரர்)
உதரம் – வயிறு
மருள – ஒக்க (உவம ஒருபு)
(முதலடி முழுவதும் எதிர்நிரல்நிறை)
முரல் – உவம உருபு (முரல)
மருவினாய் – பொருந்திருக்கிறாய்
துலை – துலாக்கோல் – தராசு
மணம் – புகழ்மணம்
பருதி – சூரியன்
7.அம்புலிப் பருவம்
எழும் உதய சூரியனை ஏந்தி – உதய சூரியன் ஒளியை ஏற்று உதய சூரியன் சின்னத்தைத்
தேர்தல் சின்னமாக ஏற்று
எல்லார்க்கும் மகிழ்வூட்டும் – மகிழ்வூட்டும் நிலவாகிய உன்னை மதியென்பதால்; மகிழ்வூட்டும் இனிய
….. மதியென்பதால் குணமாகிய ஒளிவீசும் அறிவைமதி என்பால் (மதி – சந்திரன் ; அறிவு)
மோகமதி வலை வீழப் – மாலை மலரும் காதல் என்னும் மோக வலையில் விழச் செய்வதால் காமுறு
பண்ணுமாற்றால் செய்யும் அறிவு வலையில் காளையரைக் கவர்ந்து கொள்வதால்
மாலைவரக் கூட்டத்தில் … முன்னிரவுப் புணர்ச்சியின் போது இதழ் சுவைக்கச் செய்வதால் பொதுக்
மதுவுண்ணப் பண்ணுமாற்றால் கூட்டத்தில் தன்வாயிலிருந்து வரும் விரும்பத்தக்க சொற்சுவை அளிப்பதால்
மாலைவரக் கூட்டத்தில்…. முன்னிரவுப் புணர்ச்சியின்போது இதழ் சுவைக்கச் செய்வதால் பொதுக்
மதுவுண்ணப் பண்ணுமாற்றால் கூட்டத்தில் தன் வாயிலிருந்து வரும் விரும்பத்தக்க சொற்சுவை அளிப்பதால்
மழகாளை – இளம்காளை
ஓராய் – ஆராந்தறிவாய்
மாதரை நிகரிலாது – பெரிய நிலவுலகத்தில் நிகரில்லாத உயர்ந்த அறிவுபெற்றுள்ளதால்
வான்மதி யடைந்த வாற்றால் – பெண்களுக்குச் சமமாக மாட்டாது புறமிட்டு வானத்திற்குச் செறிருப்பதால்
வையகத்தார்க் கருளுமாற்றால் – உலக மக்களுக்கு அறிவொளி தந்து அருள்வதால்
உலக மக்களுக்கு நிலவொளி தந்து அருள்வதால்
வேதனை அடைந்து கலைவளர
வழிநீமைமொடு – பொருந்துமாற்றால் – கலைநலமிழந்திருப்பது கண்டு வேதனையுற்று அதுவளர முறையாகப்
வேதமுதல்வனை அடைந்து தேய்ந்த கலை மீண்டும் வளர கங்கை
வழியும் சடையுடன் பொருந்தியிருப்பதால்
தீதற – தீமை விலக
சேணுளாய் – தூரத்திலிக்கிறாய்
எறிபட்ட துண்டம் – பூமியிலிருந்து எறியப்பட்ட சிறுகோள்; பூமியை வட்டமிட்டு வருவது; சுய ஒளி இல்லாதது.
நேர்வழி செல்லல், தன்னைப்பிறர் சுற்றிவரத் தலைவனாயிருத்தல்
சுய அறிவுமிக்கிருத்தல்
இரவி – சூரியன்
மட்டு – அளவு
வயங்கும் – பிரகாசிக்கும்
கெட்டமதி – தேந்த பிறைச்சந்திரன்
மாசுடையகீழ்மை – கருநிறப்புள்ளியாகிய மாசுபடிந்துள்ள குறைபாடு
அட்டு – காய்ச்சி
மாதர்குலம் – பெண்குலம் – பெண்கள் சமுதாயம்
உயர வரும் – முன்னேற்ற வரும்
குழவி – குழந்தை
குமைந்து – குமுறி – கொதித்து
குறுகி – அடைந்து
பெருமண்ணல் – பெருமைக்குரிய (ஆண்களுட் சிறந்த) காந்தி
கமல முகம் – தாமரை முகம் (உவமத் தொகை)
அமெரிக்க வீரருட் புகுந்துவிட்டார் – அமெரிக்க வீரர் உனக்குள் புகுந்துவிட்டார்
அமெரிக்க வீரர் மனத்துள் அண்ணா புகுந்து விட்டார்
எழில் – அழகு
ஒளிகின்ற – மறைகின்ற
புன்மை – அற்பத்தனம்
புவனம் – உலகம்
பொலிவு – அழகு
பொல்லாங்கு – தீமை (குறை)
இறும்பூது – மகிழ்ச்சி
8.சிறுபறைப் பருவம்
விருது – பட்டம்
திருக்கு – மாறுபாடு
த்ம்முனை – போர்க்களம்
குடுமி – உச்சி, சிகரம்
பேழை – பெட்டி
கும்பி – வயிறு
திங்கள் மாலை – குளிர்ந்த மாலை
விழைவு – விருப்பம்
பீளை – அழுக்கு
கழி – மிக
கடிய – கோபிக்க
கழறி – சொல்லி
பழிமலைந்து – இழிவுகொண்டு
உறுபொருள் – மிகுந்த பொருள்
கழிசடைக்குணம் – கீழ்மைக்குணம், இழிந்த குணம்
போற்றி – கருதி
9.சிற்றில் பருவம்
காரூர் மாடம் – மேகந்தவழும் உயர்ந்த மாடி
பொருவா – ஒப்பற்ற
மருவா – பொருந்தாத
தரியாதாய் – பொறுக்காதாய்
நுதிகூர்வாள் – நுதிகூர் – ஒருபொருட்பன்மொழி
மதியாம் நுதிகூர் வாள் – உருவகம்
அறைந்தோமா – கூறினோமா
10.சிறுதேர்ப் பருவம்
பெருந்திணை – பொருந்தாக் காமம்
கரி – சான்று
பிறங்குபுகழ் – ஒளிவீசும்புகழ்
உருள்சகடு – உருளும் வண்டி (சைக்கிள்)
முறுகுசுவை – மீறும்சுவை – வினைத்தொகை
சிறுகாலை – இளமையில் (இளம்வயதி)
கூவல் – கிணறு
தொட – தோண்ட
இருந்தமிழ் – பெருந்தமிழ் (பெருமைக்குரியதமிழ்)